சீனாவை தொடர்ந்து ரஷியாவில் வெளியாகிறது 2.0 !

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து 3டி தொழில் நுட்பத்தில் தயாரான 2.0 படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரூ.500 கோடிக்கு மேலான செலவில் இந்த படத்தை எடுத்து இருந்தனர். ரூ.800 கோடிக்கு அதிகமாக வசூல் ஈட்டியது.  சீனாவிலும் சீன மொழியில் டப்பிங் செய்து 2.0 படத்தை வெளியிடுவதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். அங்கு 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகின்றனர். இந்த நிலையில் சீனாவை தொடர்ந்து ரஷியாவிலும் ‘2.0’ படத்தை திரையிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். ரஷியாவில் அடுத்த மாதம் ஜூலை 12-ந்தேதி 2.0 வெளியாக இருக்கிறது. ரஷிய மொழியில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.