சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாகும் திரிஷா !

பேட்ட, 96 படங்களுக்கு பிறகு த்ரிஷாவை வேறெந்த படத்திலும் காணமுடியவில்லை. அவரது மார்க்கெட் நிலவரம் சற்றே குறைய தொங்கியுள்ளது. இதனால் சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் சிரஞ்ஜீவியுடன் அவரது 152-வது படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. மேலும் கமல் நடித்த பாபநாசம் படத்தை அடுத்து தற்போது ஜோதிகா கார்த்தி நடித்துள்ள தம்பி படத்தை இயக்கியுள்ள ஜீத்து ஜோசப் ஒரு மலையாளப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். சிரஞ்சீவி, மோகன்லால் இருவருக்கும் திரிஷா மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் பரமபத விளையாட்டு, ராங்கி ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவரது வயதில் நடிக்கும் சக நடிகையான நயன்தாரா இன்றும் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பேரில் பெரிய முன்னணி கதாநாயகர்களுக்கு சவால் விடும்படியான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.