சீரியஸ் கதை எழுதினால் தயாரிப்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் – ராஜேஷ் !

சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஜோடியை வைத்து Mr லோக்கல் படத்தினை இயக்கிய இயக்குனர் எம் ராஜேஷ் தற்போது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். எஸ்எம்எஸ் போன்ற வெற்றி படம் கொடுத்தவர் இப்படி ஒரு படம் கொடுத்துள்ளாரே என்று தான் மிஸ்டர் லோக்கல் பார்த்துவிட்டு வெளியில் வருபவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ராஜேஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் ஏன் சீரியஸான படங்கள் எடுப்பதில்லை என பேசியுள்ளார். அப்படி நான் சீரியசாக ஒரு கதை எழுதினால் தயாரிப்பாளர் கிடக்கமாட்டார்கள். நானே தயாரித்தால் தான் உண்டு என கூறியுள்ளார்.