சுசீந்திரனின் கென்னடி கிளப் படத்தின் முக்கிய அப்டேட்!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கென்னடி கிடப் படத்தின் தணிக்கைச் சான்று வெளியாகி இருக்கிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் இயக்குநர் சசிகுமார், இயக்குநர் சமுத்திரகனி, பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் கென்னடி கிளப். பெண்கள் கபடி போட்டியை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிகை காயத்ரி, நகைச்சுவை நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்த படத்திற்காக உண்மையான கபடி போட்டிகளை படம் பிடிக்க படக்குழு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளை பதிவு செய்திருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளோடு இருக்கும் இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழு ‘யு' சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இப்படம் வெளியாகும் தேதி குறித்து விரைவில் செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி இமான் இசை அமைத்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.பி. குரு தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.