சுதந்திர போராட்ட கதையில் மோகன்லாலுடன் இணையவிருக்கும் ஜாக்கி சான் !

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால். இவர் தமிழில் கமல், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதன் முறையாக மோகன்லால் அவர்களுடன் உலக அளவில் பிரபலமான நடிகர் ஜாக்கி சான் அவர்கள் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. நாயர் சன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் என்பவது வாழக்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது. இப்படம் சுதந்திரத்திற்கு முன்பாக நடைபெற்ற வரலாற்றை கொண்டு உருவாக உள்ளது. இந்த படத்தை ஆல்பர்ட் ஆண்டனி இயக்குகிறார். உலகளவில் அதிக அதிகம் புகழ் பெற்றவர் நடிகர் ஜாக்கி சான். இவரது சண்டை காட்சிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்சமயம் எந்த படத்திலும் நடிப்பதில்லை. ஆனாலும் இவருக்கான மாஸ் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. இப்படத்தில் ஜாக்கி சான் இணைந்தால் கேரளப்படவுலகிற்கு ஒரு மைல் கல்லாக அமையும்.