சுந்தர் சியின் கலகலப்பு -2…

சுந்தர்.சி இயக்கும் படம் கலகலப்பு -2.  இவர் இயக்கும் படம்  என்றாலே காமெடி, கலகலப்பு, நட்சத்திர பட்டாளம் என கலக்கட்டும் வகையில் இருக்கும். இதில் ஜீவா,ஜெய், சிவா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் நடித்த ஓவியா, அஞ்சலி இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை. இவர்களுக்கு பதில் நிக்கி கல்யாணியும், கேத்ரின் தெரேசாவும் நடிக்கின்றனர். படக்குழுவினர் படத்துக்கு பெயர் கலகலப்பு என்று வைத்ததால் கதை நகைசுவையாக தான் இருக்கும் சீரியசாக இருக்காது என்று கூறியுள்ளனர். ஜெய், ஜீவா வெற்றியை எதிர்பார்த்து கொண்டிருக்கும் கூட்டணிக்கு இந்த படம் கை  கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.