சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 உருவாகிறது !

தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருந்ததால் தொடர்ச்சியாக அந்த படத்தின் 3 பாகங்கள் வந்துள்ளன. லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் வசூல் குவித்ததால் அதன் மூன்றாம் பாகம் இப்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களும் 2 பாகங்கள் வந்தன. சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளார். வெற்றி பெறும் படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது டிரெண்டாகவே மாறிவிட்டது. ஆனால் அப்படி எடுக்கப்படும் படங்களில் பெரும்பாலான படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை.