சுந்தர் சி இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணையும் விஷால் !

மத கஜ ராஜா, ஆம்பள ஆகிய இரண்டு படங்களில் தொடர்சியாக விஷாலை வைத்து இயக்கிய சுந்தர் சி, தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர். மத கஜ ராஜா இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில், மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஷால் – சுந்தர்.சி கூட்டணி விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். துருக்கியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.