Cine Bits
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படம் சங்கமித்ரா!

தமிழில் ஒரு பிரம்மாண்ட படம் தயாராக இருக்கிறது. அது, சுந்தர் சி இயக்கும் 'சங்கமித்ரா' படம் தான். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் என பல நாடிகர்கள் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இப்படத்திற்கான ஃபஸ்ட் லுக்கை பிரம்மாண்ட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் படக்குழு வெளியிட்டுள்ளனர். தற்போது இப்படத்தின் பட்ஜெட் ரூ. 250 கோடி என்று தயாரிப்பு குழுவிலிருந்து தகவல் வந்துள்ளது. அண்மையில் ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் கேட்ட பட கதைகளில் தன்னை ஈர்த்த ஒரே கதை இதுதான் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.