‘சுமோ’ கலைஞர்களுடன் சிவா பிரியா ஆனந்த்

சென்னை 28 – 2', 'கலகலப்பு 2', தமிழ் படம் 2' ஆகிய படங்களில் நடித்து வந்த சிவா, வெங்கட் பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனால், அந்தப் படம் திரைக்கு வருவது தாமதமாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, காமெடி கலந்த த்ரில்லர் கதைகளைக் கேட்டு வந்த சிவா, இப்போது 'சுமோ' என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். 'வணக்கம் சென்னை' படத்துக்குப் பிறகு, ப்ரியா ஆனந்த் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜப்பானில் புகழ்பெற்ற 'சுமோ' விளையாட்டை மையப்படுத்தி இருக்கும் இந்தப் படத்தில் நிறைய சுமோ விளையாட்டு வீரர்களும் நடித்துள்ளனர். பிப்ரவரி 14', 'ஆயிரம் விளக்கு' படங்களை இயக்கிய ஹோசிமின் இப்படத்தை இயக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகளின் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற்று முடிந்துள்ளது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.