Cine Bits
சுயசரிதை எழுதும் இளையராஜா!

அன்னக்கிளி படத்துக்கு 1976-ல் இசையமைத்து முதல் படத்திலேயே மச்சானை பாத்தீங்களா, அன்னக்கிளி உன்னை தேடுது உள்ளிட்ட பாடல்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இளையராஜா இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை நிகழ்த்தி இருக்கிறார். வளிமண்டலத்தில் நீர் காற்றுபோல இசையும் இருக்கிறது. அந்த அதிர்வலைகளை எனது மூளையால் தொட முடிந்தது. இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும் இசையையும் ஒரு பாடமாக சேர்க்க வேண்டும். இசைகலைஞர்களால் உருவாக்கப்படும் இசைக்குதான் ஆற்றல் அதிகம் இருக்கிறது. கணினி உருவாக்கும் இசையில் உணர்ச்சி என்பது இருக்காது. 1978-ம் ஆண்டில் 56 வாரங்களில் 58 படங்களுக்கு நான் இசையமைத்தேன். என்னை பற்றி சுயசரிதை எழுத இருக்கிறேன். விரைவில் அது வெளிவரும். இவ்வாறு இளையராஜா கூறினார்.