Cine Bits
சூது கவ்வும் 2-ம் பாகம் தயாராகிறது !

தமிழில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. இந்த படம் 2013-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். நலன் குமாரசாமி இயக்கினார். சூது கவ்வும் 2-ம் பாகத்திலும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.