Cine Bits
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காரை கேட்ட மஹிந்திரா நிறுவன ஓனர்! தயாரிப்பாளர் தனுஷ் என்ன முடிவெடுத்தார்?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் காலா படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து வைரலானது. அதில் ஒரு போஸ்டரில் ரஜினி மஹிந்திரா கார் எஸ்யூவி மீது கூலாக அமர்ந்துகொண்டிருப்பது போன்று காட்டியிருந்தனர். அந்த போஸ்டரை பார்த்த மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த், இந்த வண்டி தனக்கு வேண்டும், அதை நிறுவனத்தின் மியூசியத்தில் வைக்கபோகிறேன் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் பதிலளித்துள்ளார். “அது தற்போது ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது, முடிந்தவுடன் உங்களிடம் அது வந்து சேரும்” என்று கூறியுள்ளார்.