Cine Bits
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்தில் ஹுமா குரேஷியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் 'கபாலி'. இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஹுமா குரேஷி கதாபாத்திரம் என்ன என்பது வெளியாகியுள்ளது. அவர் படத்தில் பாலியல் தொழிலாளியாக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ரஜினிக்கு ஜோடியாக முதலில் ஹுமா குரேஷி என்று கூறப்பட்டது ஆனால் அவருக்கு ஜோடி ஈஸ்வரி ராவ் தானாம் என்று கூறப்பதுகிறது.