சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பு!

வரும் 27ம் தேதி முதல் ஆரம்பமாகும், சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக யார் வருகிறார்களோ அவர்களுக்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையில், பாடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை தொடங்க இருக்கிறது. பிரபல பின்னணிப் பாடகர்களாக உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பொன்னி தயாள், ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக நிகழ்ச்சியை வழிநடத்த உள்ளனர். ப்ரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகிய இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் இளம் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொள்ள இருக்கிறார்.