சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்த நிலையில், படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாகவும், படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.