சூப்பர் டீலக்ஸ் படம் எப்படி இருக்கு!

'ஆரண்ய காண்டம்' படத்தின் தொடர்ச்சியாக சூப்பர் டீலக்ஸ் படத்தை எடுத்துக்கொள்ளலாம். அதே போன்றதொரு திரைக்கதையின் மூலம் மீண்டும் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர். செயற்கை தன்மையே இல்லாத தனது யதார்த்தமான நடிப்பால், ஷிப்லா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஒரு நடிகனுக்கு எந்த இமேஜும் இருக்கக் கூடாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். விஜய் சேதுபதிக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் நடித்திருக்கிறார் சமந்தா. காது கூசும் வார்த்தைகள் கூட, அவர் பேச கேட்கும் போது தவறாக தெரியவில்லை. முதிர்ச்சியான நடிப்பை, மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் சமந்தா. பகத் பாசிலின் நடிப்பு திறமை சின்ன ரியாக்ஷன்களில் கூட அப்லாஸ் அள்ளுகிறார், ராசுகுட்டி அஷ்வந்த், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் என ஒவ்வொருமே தனித்தனியாக ஸ்கோர் செய்து, மொத்த டீமின் எண்ணிக்கையை உயர்த்துகிறார்கள்.