சூப்பர் டீல்ஸ் படத்தில் நான் நடிக்காமல் போய்விட்டேன் -வருந்தும் அனுராக் காஷ்யப்!

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம், 'சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின் போன்ற முன்னணி நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். படம் பார்த்த அனுராக் காஷ்யப், தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், இந்த படத்தில் நடிப்பதற்காக முதலில் என்னிடம் தான் கேட்டார்கள் என்னால் நடிக்கமுடியவில்லை ஆனால் t'படம் பார்த்த பிறகு இதில் நான் நடிக்கவிலையே என வருத்தமாக இருக்கிறது. குமாரராஜா ஒரு இறக்கமற்ற, பயமற்ற, இயக்குநர், அவரிடம் நிறைய திறமை உள்ளது. நான் இதெல்லாம் சொல்லக்கூடாதுதான். தியாகராஜன் குமாரராஜா என்ன பண்ணி வச்சிருக்கார்னு இன்னும் தெரியல” என்று பதிவிட்டிருக்கிறார்.