சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன் !

சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை துணிச்சலுடன் தேர்வு செய்து நடித்து ரசிகர்களுடைய பாராட்டைப் பெற்றார். இந்நிலையில் இவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் தமிழ்வாணன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, அமிதாப் பச்சன் நடித்துவரும் திரைப்படம் உயர்ந்த மனிதன். இந்தப் படம் தமிழ், ஹிந்தி, ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல், விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.