சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாவரா மஞ்சு வாரியார் ?

‘அசுரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மஞ்சு வாரியர், முதல் படத்திலேயே நடிப்பில் அசத்தியதோடு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்தின் 198 வது படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மஞ்சு வாரியரும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.