Cine Bits
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜி.எஸ்.டி பற்றி என்ன சொன்னார்?
ஜி.எஸ்.டி ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இந்நிலையில், சினிமா துறை போராட்டத்தில் குதித்துள்ளது. ஏற்கனவே மாநில அரசு 30% கேளிக்கை வரி வசூலித்து வரும் நிலையில், ஜி.எஸ்.டி 28% சேர்த்து மொத்தம் 58% வரி செலுத்த வேண்டி வரும். அதனால் தமிழ் சினிமா துறை அழிந்துவிடும் என கூறி, கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தற்போது இந்த பிரச்சனை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “சினிமா துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் நலனுக்காக, தமிழ் நாடு அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகிறேன்” என ரஜினி கூறியுள்ளார்.