சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த மிக முக்கிய செயல்! மக்கள் பாராட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் அவர் மூன்று முகம் படம் போல போலிசாக நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு அவர் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 2020 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ரஜினிகாந்தின் அரசியல் வேலைகளும் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு செய்யும் நல்ல திட்டங்களில் ஒன்றாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளும் லாரிகளில் நீர் அனுப்பிவைத்துள்ளார். இதனால் பயனைந்த அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அண்மைகாலமாக அவர் நதிநீர் இணைப்பு குறித்து பேசிவருகிறார்.