சூப்பர் ஹீரோவாக ஜெய்!

ஜெய் நடிக்கும் அடுத்த படத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன. புதுமுக இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கும் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஜெய்.
‘ப்ரேக்கிங் நியூஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அதிக அளவிலான விஷுவல் Effect இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். எடிட்டராக ஆண்டனியும் ஒளிப்பதிவாளராக ஜானி லாலும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். விஷால் பீட்டர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபகாலமாக பெரிய ஹிட் படம் இல்லாமல் தடுமாறி வரும் ஜெய், புது முயற்சியாக இந்த படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிப்பதன் மூலம் ஹிட் படம் கொடுப்பார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.