சூப்பர் ஹீரோ படத்தில் ஜெய் !

ஜெய் சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அழுந்த கால் பதித்த நடிகர். வெங்கட் பிரபு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தற்போது அவர் நடிக்கும் புதுப்படம் ஒன்றிற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் பிரேக்கிங் நியூஸ். தமிழில் முதன்முறையாக சிஜி பயன்படுத்தி சூப்பர் ஹிரோ படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இது குறித்து கூறும்போது, இந்த படம் ஜீவன் என்ற ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனை பற்றிய கதை. விண்வெளியில் இருந்து ஒரு விண்கல் பூமியை தாக்கும் போது, ஒரு சிறு துகள் அவரது உடலில் துளைக்கும்போது எல்லாம் மாறி விடுகிறது. அவரது உயிரணுக்களில் விவரிக்க முடியாத வேதியியல் எதிர்வினைகள் நடந்து, அவரது திசுக்கள் பிறழ்ந்து, மூளையில் நியூட்ரான்கள் வினைபுரிவதால், அவர் ஒரு வெல்ல முடியாத சூப்பர் ஹீரோவாக மாறுகிறார்.