சூரரை போற்று படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் பாடிய சூர்யா !

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஸ்பெஷல் தீம் மியூசிக் ஒன்றை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாறா தீம் மியூசிக்குக்கான ராப் பாடலை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் கூறியுள்ளார்.