சூரியை கதாநாயகனாக நடிக்கவைக்கும் வெற்றிமாறன்

வடசென்னை  படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய அசுரன்  படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி தமிழகம் எங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலிலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அசுரன் படத்துக்குப் பிறகு வடசேன்னை – 2படத்தை இயக்குவார் என எதிர்பார்த்த வெற்றிமாறன் இப்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். தொடர்ந்து நாவல்களை படமாக்கி வரும் வெற்றிமாறன், இந்த முறை கவிதையை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்க உள்ளார். நா.முத்துகுமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்ட கதையைப் படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இறந்து போன முதியவர் ஒருவரின் இறுதி சடங்குகளைப் பற்றிய கவிதையை ஒட்டி உருவாகும் இந்த படத்தில் சூரி தாத்தாவின் பேரனாக நடிக்கிறார்.