சூரியை வைத்து படம் இயக்கும் வெற்றிமாறன் – கதைக்கு தான் நாயகன் !

அசுரன் வெற்றிக்கு பின் நடிகர் சூரியை வைத்து படம் இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன். இதுகுறித்து அவர் கூறுகையில் கதைக்கு யார் தேவையோ, அவரைத்தான் நாயகனாக தேர்வு செய்கிறேன். இவர் நடித்தால் தான் படம் ஓடும், இவர் நடித்தால் படம் ஓடாது என்பதெல்லாம் பழைய கதை, அதையெல்லாம் இப்பொழுது உடைத்தெறிந்துவிட்டோம். கதைக்கு யார் தேவையோ, அவரை வைத்து படம் எடுத்தால் படம் நிச்சயம் வெற்றிபெறும், அந்த வையில் தான் சூரியை வைத்து இயக்கும் படம் எடுக்க முடிவு செய்தோம். அதில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். சூரியை வைத்து எடுக்கும் படம் வெளிநாடுகளில் படமாக்கவுள்ளோம். கதையை மட்டும் நம்பினால் போதும் படம் நிச்சயம் வெற்றிபெறுமென்பதை வெற்றிமாறன் அழுத்தந்திருத்தமாக பதியவிருக்கிறார். இவரின் இந்த பேச்சு பல முன்னணி நடிகர்களுக்கு சவுக்கடியாக விழுந்திருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.