சூர்யாவின் காப்பான் ஆகஸ்ட் 30 ரிலீஸ் !

சென்ற வருடமே வெளியாகி இருக்க வேண்டிய NGK படம் வரும் மே 31ம் தேதி தான் ரிலீஸ் ஆகிறது. இதனால் காப்பான் ரிலீஸ் மேலும் தள்ளிப்போகிறது. நடிகர் சூர்யா மற்றும் மோகன்லால் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் காப்பான் படம் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போது வந்துள்ள தகவல் படி காப்பான் ஆகஸ்ட் 30ம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறை வரவுள்ளது. அதை பயன்படுத்தி வசூல் அள்ளலாம் என்று தான் காப்பான் அந்த தேதியில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது.