சூர்யாவின் 36 வது படம்….

நடிகர் சூர்யாவின் 36 வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியார் ஃபிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ரகுல்பரீத் சிங், சாய் பல்லவி இருவரும் நடித்து வருகிறார்கள். இதில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று இயக்குனர் செல்வராகவனின் பிறந்த நாள் அன்று வெளியிட்டு உள்ளனர். இந்த போஸ்டரில் சூர்யா வித்தியாசமான வேடத்தில் போராளியான சேகுவேரா இருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த பாடத்தின் தலைப்பும் வித்தியாசமாக “NGK” என்று உள்ளது. இந்த படம் தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.