சூர்யாவுக்காக கதை தயார் – இயக்குனர் பாண்டிராஜ் !

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து பாண்டிராஜ் ஒரு ட்விட் போட்டார். அந்த ட்விட்டை குறிப்பிட்டு, ரசிகர் ஒருவர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கும்படி பாண்டிராஜிடம் கேட்க, அதற்கு அவர் அளித்த பதிலில், பக்கா மாஸாக கிராமத்து சாயலில் அதிரடி, காமெடி, குடும்ப சென்டிமண்ட்டுடன் கதை தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதன்மூலம் பாண்டிராஜ் – சூர்யா கூட்டணி விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார். இவர் கடைசியாக கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கியிருந்தார். சூர்யா தயாரித்த இந்த படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.