Cine Bits
சூர்யாவுடன் இணையும் விஸ்வாசம் கூட்டணி !

விஸ்வாசம் பட வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூர்யா – சிவா கூட்டணி முதல்முறையாக இணைகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையைமக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அதே குழுவினரை சூர்யா 39 படத்தில் ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஸ்வாசம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வெற்றியும், படத்தொகுப்பை கவனித்த ரூபனும் சூர்யா படத்திலும் தொடர்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.