சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியாகும் படத்தின் பெயர் – ஜாக்பாட் ?

சூர்யாவின் தயாரிப்பில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா, ரேவதி, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வெறும் 35 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை கல்யாண் இயக்கியுள்ளர் ‘ஜாக்பாட்’ என்ற தலைப்பு வைத்திருப்பதாகவும் வரும் ஜூலையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.