சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பாடலின் டீஸரை வெளியானது. ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் சூர்யாவின் சிங்கம் 3 படத்திற்கு பிறகு வேறு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பட பிரச்சனைகளுக்கு நடுவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக்கை தொடர்ந்து படக்குழு படத்தில் இடம்பெறும் தர லோக்கல் பாடலான சொடக்கு என்ற பாடலின் டீஸரை அண்மையில் வெளியிட்டனர். இப்பாடலும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது என்ன தகவல் என்றால் சொடக்கு பாடலின் முழு பாடல் வரும் அக்டோபர் 26ம் தேதி வெளியாக இருப்பதாக என அனிருத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.