சூர்யா படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு !

சூர்யா K.V. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் மத்திய சிறப்பு கமாண்டோ படை அதிகாரி வேடத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படம் தவிர சூரரை போற்று எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் 1980-களில் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். ரசிகர்கள் சூப்பர் ஸ்டாராக அவரை கொண்டாடினார்கள். தமிழில் ரஜினிகாந்துடன் அன்னை ஓர் ஆலயம், கமல்ஹாசனுடன் குரு உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சூரரை போற்று படம் மூலம் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மொழியிலும் வெளியாகிறது.