“செக்கச்சிவந்த வானம்” படப்பிடிப்பு 12ம் தேதி துவங்குகிறது…

மணிரத்னம் இயக்கும் “செக்கச்சிவந்த வானம்” என்ற  படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்,மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன், விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர், அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா ஆகிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இதில் பாடலாசிரியராக வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 12ம் தேதி ஆரம்பமாக உள்ளது.