செத்தபின் பாலூற்றி என்ன பயன்.. இப்போது சந்தோசத்தைவிட கோபம் தான் வருகிறது”.. கடும் கோபத்தில் சேரன்!

சேரன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் திருமணம். விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றபோதும், இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இதனால் விரைவில் தியேட்டர்களில் இருந்து எடுத்து விட்டார்கள். அந்தவகையில் அவரது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், ‘தான் திருமணம் படத்தைப் பார்க்க தியேட்டருக்குச் சென்றதாகவும், ஆனால் அதற்குள் வேறு படம் மாற்றி விட்டதாகவும்' சோகமாகத் தெரிவித்திருந்தார். அதனால் இளைஞர்களைக் கவர மீண்டும் அப்படத்தை வெளியிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். தற்கு பதிலளித்துள்ள சேரன் தனது பதிவுகளில், “நீங்களெல்லாம் முதலில் பார்க்க வரவில்லை. ஆட்கள் வரவில்லை என தியேட்டர்காரர்கள் எடுத்துவிட்டனர். இப்போது வெளியிடலாம் என்றால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதற்குள் பைரசியில் படம் வந்துவிட்டது. அதில் படம் பார்த்து எல்லாரும் கொண்டாடுகிறார்கள், சிறந்த படம் என. இறந்தபின் பாலூற்றி என்ன பயன்? இப்போது ஒவ்வொருவரும் நல்ல படம் என சொல்லும்போது, சந்தோஷத்தைவிட கோபம்தான் வருகிறது என பதிலளித்துள்ளார்.