சென்னையின் பிரபல தியேட்டரில் மெர்சல் படத்தை திரையிட மாட்டோம் என அறிவிக்கப்பட்டது! – ரசிகர்கள் அதிர்ச்சி!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரும் படம் மெர்சல். இப்படம் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தீபாவளிக்கு வெளிவருமா என்பதே இன்னும் சந்தேகமாக உள்ளது. இது ஒருபுறமிருக்க தற்போது சென்னையில் பிரபல திரையரங்கமான காசி தியேட்டர் மெர்சல் படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்துள்ளனர். “ரிலீஸ் செய்வதற்காக போட்ட கண்டிஷன்கள் ஒப்புக்கொள்ளமுடியாது, நாங்கள் மெர்சல் படத்தை ரிலீஸ் செய்யவில்லை” என ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.