சென்னை டு பழனி விஜய் சேதுபதியின் புது ஐடியா!

விஜய் சேதுபதி தயாரித்த ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கியவர் பிஜு. இவர் அடுத்து இயக்கும் படம் சென்னை பழனி மார்ஸ். இந்த படத்தையும் விஜய் சேதுபதி தான் தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு வசனமும் விஜய் சேதுபதி தான். சென்னை பழனி மார்ஸ் படம் முழுக்க முழுக்க பயணத்தை மையப்படுத்திய காமெடி படமாக உருவாகி இருக்கிறது. எல்லா மனிதனுக்கும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த கனவை நோக்கிய பயணத்தை காமடி பாணியில் படமாக்கியிருக்கிறார்கள். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.