சென்னை 28 -3 ல் அஸ்வின்

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 9ம் தேதி வெளிவந்த படம் 'சென்னை 28 – இரண்டாம் இன்னிங்ஸ்' கடந்த இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.கடந்த 23ம் தேதி வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போனதால், சில தியேட்டர்களில் மீண்டும் 'சென்னை 28 – 2' படத்தைத் திரையிட ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன​.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை பார்த்த​ தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் பாராட்டியுள்ளார். சினிமா பிரியரான அஷ்வின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் உடையவர்.அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் என்னுடைய வாழ்க்கையை முழுவதுமாகத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தப் படத்தில் நானும் பங்கெடுத்திருக்கலாம்,” என பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் அஸ்வினுக்கு பதில் கூறும் வகையில், 'உங்களை 'சென்னை 28' இரண்டாம் பாகத்தில் மிஸ் செய்துவிட்டேன். கண்டிப்பாக மூன்றாம் பாகத்தில் உங்களை நடிக்க வைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.