சென்ராயனுக்கு ஆண் மகன் பிறந்துள்ளான்!

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் கவனத்திற்கு வந்தவர் சென்ராயன், நிகழ்ச்சியில் இருந்து போது அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக கூற அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் யாராலும் மறக்க முடியாத ஒன்று. இந்நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகன் பிறந்த சந்தோஷத்தில் சென்ராயனுக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. என் மகன் எனக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் என்று கூறினார். நான் பிறந்தபோது எங்க ஊரில் சிலருக்கு மட்டுமே தெரியும் ஆனால் என் மகன் பிறந்ததை ஊரே கொண்டாடுகிறார்கள், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி, எல்லோரின் பிரார்த்தனைக்கும் நன்றி என பூரித்து பேசியுள்ளார் சென்ராயன்.