செய்கிற தொழிலில் அக்கறையும் நேசிப்பும் இருந்தால் மன அழுத்தம் அறவே இருக்காது – ஷ்ரத்தா கபூர் !

சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா கபூர். இந்தியில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இயற்கை அழகு என்பது நல்ல தூக்கம். தன்னை தானே மறந்து தூங்குபவர்களை பார்த்தால் பிடிக்கும். சரியான தூக்கம் இல்லை என்றால் எவ்வளவு கஷ்டப்பட்டும் பிரயோஜனம் இல்லை. சரியான தூக்கமும் அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கமும் ஆரோக்கித்தையும் அழகையும் தரும். மேக்கப்பால்தான் அழகு வரும் என்பதை நம்ப மாட்டேன். மேக்கப் இல்லை என்றால்தான் சவுகரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். மன அழுத்தம் எல்லோரையும் தாக்குகிறது. அதில் இருந்து விடபட ஓய்வு இல்லாமல் வேலை செய்ய வேண்டும். செய்கிற தொழிலில் அக்கறையும் நேசிப்பும் இருந்தால் மன அழுத்தம் அறவே இருக்காது இவ்வாறாக ஷ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.