செல்ல நாய் குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய அட்லீயம் அவரது மனைவியும் !

இயக்குநர் அட்லியின் மனைவி ப்ரியா பெக்கி என்கிற நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார். அந்த பெக்கியின் 3வது பிறந்தநாளை தனது கணவருடன் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடினார் ப்ரியா. ப்ரியாவுக்கு பெக்கி என்றால் ரொம்ப இஷ்டம். இது அட்லிக்கு மட்டும் அல்ல அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் தெரியும். தன் வாழ்வில் எடுத்த சிறந்த முடிவே பெக்கியை வளர்ப்பது தான் என்றெல்லாம் ப்ரியா உணர்ச்சிவசப்பட்டு ட்வீட் போட்டுள்ளார். இது சிலருக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.