சேதுபதிக்கு பிறகு அதிகமாக அம்மா கதாபாத்திரங்களே வந்தன – ரம்யா நம்பீசன் !

ரம்யா நம்பீசனுக்கு வாய்ப்புகள் நிறைய வந்தாலும் பீட்சா, சேதுபதி என்று தேர்ந்தெடுத்து நடிக்கிறார். எனக்கு மார்க்கெட் பற்றி கவலை இல்லை. சேதுபதிக்கு பிறகு அதிகமாக அம்மா கதாபாத்திரங்களே வந்தன. இந்த படம் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக வந்தது. முற்றிலும் புதியவர்கள், இளைஞர்கள் என்பதால் ஒப்புக்கொண்டேன். அம்மாவாக நடிப்பதை விட இதுபோன்ற வேடங்களை அதிகம் விரும்புகிறேன். பெரிய ஹீரோ படம் என்றாலே அம்மா வேடங்களாக வருகின்றன. என்னை கவுரவ நடிகையாகவே மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எல்லாம் நண்பர்களுக்காக நடித்தவை. இனி குறைத்துக்கொள்வேன். நான் தேர்ந்தெடுத்து எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வேன்.