சேரனின் அழைப்பையேற்று காதலியுடன் வந்த தர்ஷன் !

நடிகரும் இயக்குனருமான சேரன் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதையடுத்து தர்ஷனும் அவரது காதலியும் ஷணம் ஷெட்டியும் ஜோடியாக இசை வெளியீட்டு விழாவிற்கு வந்ததோடு சிறப்பு திரையீடலை பார்த்து ரசித்து விட்டு அவரை பாராட்டியும் சென்றனர். ராஜாவுக்கு செக் படத்தை சாய் ராஜ்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சேரனுடன் இர்பான், சிருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். விரைவில் படம் வெளிவரவிருக்கிறது.