சேரனின், ஆட்டோகிராப் 2-ம் பாகம்

சேரன் நடித்து இயக்கி 2004-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் ஆட்டோகிராப். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்ற பிறகு ஏற்படும் 3 பருவ காதலை உணர்வுப்பூர்வமாக இந்த படம் சொல்லி இருந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கோபிகா பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினேகா, மல்லிகா ஆகியோரும் நடித்து இருந்தார்கள். இந்த நிலையில் ஆட்டோகிராப் 2-ம் பாகத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் சேரன் அறிவித்து உள்ளார். இந்த படத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.