சேரனுடன் இணையும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் சமுதாய கருத்துக்களுடன் கூடிய குடும்பப்பாங்கான பல படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் சேரன்.இவர் நடிகர், இயக்குனர் என இருவித அவதாரங்களில் ஜொலித்த இவரது பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப்,ராமன் தேடிய​ சீதை ஆகிய படங்கள் மிகச்சிறந்த வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் சேரனுடன் விஜய்சேதுபதி இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் 'தர்மதுரை' என்ற குடும்பப்பாங்கான படத்தில் நடித்து ஹிட் கொடுத்த விஜய்சேதுபதி தற்போது மீண்டும் ஒரு குடும்ப்பாங்கான கதைகளத்தை அமைக்கும் சேரனுடன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்ததகவல் மிகவிரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.