சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு !

சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த படம் ஆரம்பிப்பதற்குள் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுவிட்டார். தற்போது அவர் அந்த படத்தை துவக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதியை வைத்து சேரன் படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படத்திற்கு பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. சிம்புவும், விஜய் சேதுபதியும் ஏற்கனவே மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.