Cine Bits
சேரிகள் உண்மையில் சென்னை மாநகரத்தின் இயற்கையான கூறுகள் – குப்பத்து ராஜா இயக்குனர்
குப்பத்து ராஜா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனை பார்த்த பலரும், படம் லோக்கலாக இருக்கிறது என கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் பாபா பாஸ்கர், லோக்கல் என்ற வார்த்தையை தான் ஏற்கவில்லை என்றார். உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை நேட்டிவிட்டி என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மையில் சென்னை மாநகரத்தின் இயற்கையான கூறுகள் தான். குப்பத்து ராஜா படத்தின் ட்ரைலர் யூடியூபில் லட்சக்கணக்கான ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்றார் அவர்.