சைக்கோ கொலைக்களமான படம் – மிஷ்கின் எச்சரிக்கை !

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்தியா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் சைக்கோ. படத்தை பற்றி இயக்குனர் மிஷ்கின் கூறுகையில், படத்தின் பெயரே சொல்லிவிடும் இப்படம் எந்தமாதிரி கதைக்களம் என்று, இப்படம் கொலைக்களம் நிறைந்த படமாகும். நான்கைந்து காட்சிகளில் மிகவும் கொடூரமாக இருக்கும். குழந்தைகள் மற்றும் இதயம் பலகீனமானவர்கள் படத்தை பார்த்து மனதளவில் பாதிக்கப்படுவார்கள். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என இயக்குனரே எச்சரிக்கைவிடும் தொனியில் கூறியுள்ளது மனதில் அச்சத்தை உண்டாக்குகிறது. டீசரும், டிரைலரும் அதையே உணர்த்துகிறது.