சைத்தான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சைத்தான். இப்படத்தின் தமிழ் நாட்டு வெளியீடு உரிமையை ஆரோ சினிமாஸ் கைப்பற்றி இருக்கிறது. மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக தீபாவளிக்கு வருவதாக கூறப்பட்ட சைத்தான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள பணப்பிரச்சினை காரணமாக படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளது. மேலும்  இப்படத்தின் புதிய தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.